தி.மு.க.திட்டமிட்டு சதி.. அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை..செல்லூர் ராஜு சொல்கிறார்!
DMKs conspiracy There is no problem in AIADMK. Sellur Raju says!
அ.தி.மு.க., கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார் என்றும் இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை அருகே,மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அப்போது அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உட்பட அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து செலுத்தினார்கள்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது:-அ.தி.மு.க.,வில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெ., படம் இல்லை என செங்கோட்டையன் அமைப்பாளரிடம் தெரிவித்துள்ளார் என்றும் இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தி.மு.க., அரசு திட்டமிட்டு செய்துள்ளது என குற்றம்சாட்டினார்.
மேலும் அ.தி.மு.க., கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை என கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார் என்றும் இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார் இதற்கு பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு .
English Summary
DMKs conspiracy There is no problem in AIADMK. Sellur Raju says!