இனி இப்படியான விபத்து நேராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!
Railway Minister Ashwini Vaishnaw Say About Odisha Train Accident
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மீது, யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி, அடுத்தடுத்து பெரும் விபத்து நிகழ்ந்தது.
இந்த கொடூரமான விபத்தில் சிக்கி இதுவரை 261 பலியாகியுள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை சீரமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துவிட்டது. மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி இருக்கிறோம்.
இந்த கொடூரமான விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்துவோம். வரும் காலங்களில் இப்படியான நிகழ்வு நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
Railway Minister Ashwini Vaishnaw Say About Odisha Train Accident