ராஜபக்சே குடும்பம் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்.. மறுப்பு தெரிவித்த இந்திய தூதரகம்.!
Rajapaksa family has reportedly taken refuge in India..Indian embassy denied
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதற்கிடையே பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச் சென்று விட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
இந்த நிலையில் இது முற்றிலும் தவறானது அடிப்படை ஆதாரமற்றது. இதை யாரும் நம்ப வேண்டாம் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
English Summary
Rajapaksa family has reportedly taken refuge in India..Indian embassy denied