நானே எம்எல்ஏ, நானே எம்பி! ராஜினாமா செய்யாமல் கேள்வி கேட்கும் இண்டி கூட்டணி தலைவர்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த பலரும் போட்டியிட்டிருந்தனர். இதில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதிவை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை தள்ளப்பட்டு உள்ளனர்.

இதில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம், இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோக்தன்திரிக் கட்சி (RLP) கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அனுமான் பெனிவால், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதிவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனால், இரண்டு பதவிகளையும் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா நாட்டில் இது போன்ற ஒரு வசதி இருக்கும் போது, ஏன் இதே போல் நம் இந்தியாவிலும் இருக்கக் கூடாது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ள அனுமான், அக்னிபாத் திட்டத்திற்குப் பதிலாக பழைய முறைப்படி ராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan MLA MP Hanuman issue


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->