300 முறை தோப்புக்கரணம் - ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்.!
case file against college students for ragging in rajasthan
ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். ஆனால், இது குறித்து அவர் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் 15-ந்தேதி சீனியர் மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் முதலாமாண்டு மாணவரை சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போடச் சொல்லி ராகிங் செய்துள்ளனர். இதனால், அந்த மாணவரின் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மாணவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 20-ந்தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு ஆன்லைன் மூலமாக ஒரு புகார் கடிதம் வந்துள்ளது. அதன் மூலமாக, இந்த ராகிங் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 7 மாணவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
case file against college students for ragging in rajasthan