கமல் படங்களை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன் - இயக்குனர் அட்லி.! - Seithipunal
Seithipunal


28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2.  இந்த படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயரிப்பில், அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடன இயக்குனர்கள் போஸ்கோ, சீசர் மற்றும் 'ஜவான்' பட இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் அட்லி, "நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே 'இந்தியன் 2' கதை பற்றி இருவரும் உரையாடியிருக்கிறோம். நிச்சயம் இத்திரைப்படம் இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

இந்திய சினிமாவின் பைபிள் கமல். அவர் சினிமாவுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவரது படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். என் மகன் மீர், நாளை சினிமா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால் முதலில் கமல் சார் படத்தைத்தான் பார்க்கச் சொல்லுவேன். கமல் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director atlee speech about kamal


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->