மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு + கல்வி கட்டணம்! முதல்வர் ரங்கசாமியின் அசத்தல் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்குக வேண்டும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த ஜூலை 18ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தார்.

அதனை அடுத்து கடந்த ஜூலை 27ம் தேதி புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் ஒப்புதல் கோப்புகளில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார்.

இதன் மூலமாக புதுச்சேரியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 37 எம்.பி.பி.எஸ் இடங்கள், 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மருத்துவ படிப்பு கல்வி கட்டணத்தை அரசே முழுமையா ஏற்கும் என புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10% இட ஒதுக்கீடின் சேரும் 48 மாணவர்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rangasamy announced govt will bear the tuition fee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->