ரேபிடோவில் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுநர் - பயத்தில் பைக்கில் இருந்து குதித்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


ரேபிடோவில் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுநர் - பயத்தில் பைக்கில் இருந்து குதித்த சம்பவம்.!!

நாடு முழுவதும் ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவை இயங்கி வருகிறது. மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல இந்த பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்துகின்றனர். 

அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் கடந்த 21ம் தேதி இளம்பெண் ஒருவர் இந்திரா நகரை நோக்கி செல்வதற்காக ரேப்பிடோவை புக் செய்துள்ளார். அதன் படி ரேப்பிடோ பைக்கில் ஏறிய இளம்பெண்ணிடம் இருந்து அதன் ஓட்டுனர் ஓடிபி குறித்து பார்ப்பதற்காக செல்போனை வாங்கியுள்ளார். 

இதையடுத்து, பைக் ஓட்டுநர் இளம்பெண்ணை மாற்று பாதையில் அழைத்து சென்று தவறாகவும் நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் வேகமாக ஓடும் பைக்கில் இருந்து திடீரென குதித்து தப்பியுள்ளார்.  

இதனால், இளம்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

அதன் படி போலீசார் சம்பந்தப்பட்ட ரேப்பிடோ ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இளம்பெண் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்து தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rapido bike driver arrested for voilated to woman in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->