மீண்டும் ரூ.1,000 நோட்டுகள் அறிமுகப்படுத்த திட்டமில்லை.. ஆர்.பி.ஐ தகவல்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாதது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தங்களின் பிழையை சமாளிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டு பரிமாற்றத்தற்கு உகந்தது அல்ல என கடந்த 2016 ஆம் ஆண்டே கூறியிருந்தோம். 2016 ஆம் ஆண்டு நவம்பரில் செய்த மிகப்பெரிய பிழையை சரிசெய்ய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்பது உறுதியானது. ரூ.1,000 நோட்டை ரிசர்வ் வங்கி மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. 2016ல் நான் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் 'சுத்தமான' நோட்டாக இருக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. ஒரு சில பணக்காரர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது" என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டாரத்திலிருந்து மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் போதுமான அளவு 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனாலும் 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI informs no plans to introduce Rs1000 notes again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->