ஒன்றரை கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்.! வனக்காவலர் உட்பட 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் ஒன்றரை கோடி மதிப்புள்ள 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தில் உள்ள மன்றம்பள்ளி கிராமத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது 2 டன் எடை கொண்ட 100 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை காவலர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்தபோது செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

redsandalwood seized in Andra Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->