உத்திரபிரதேசம் : ஹத்ராஸ் மத நிகழ்வில் என்ன நடந்தது..?கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் உயிரிழப்பா..?! - Seithipunal
Seithipunal



உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் இன்று (ஜூலை 2) ஒரு மத கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து பேசிய CMO உமேஷ் குமார் திரிபாதி, "இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அதில் 25 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்ளனர். இவர்களின் உடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். 

மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  இந்த குறிப்பிட்ட இடத்தில் நடந்த மத நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தான் இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணம். மேலதிக தகவல்கள் விசாரணைக்குப் பின்னர் தான் தெரிய வரும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், " ஹத்ராஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தவும், மேலும் தேவையான அனைத்து உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் தொழில் துறை மையமாக விளங்கிய நகரம் தான் உத்திரபிரதேசத்தில் உள்ள இந்த ஹத்ராஸ் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Religious Event in Hathras 25 More Feared Dead in Stampede


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->