புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை.!
Request to nirmala seetharaman for increase taxes in tobacco products
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட ஒன்பது மாநிலங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "இந்தியாவில் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் இருபத்தெட்டு சதவீதம்பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அவர்களில் பதினான்கு சதவீதம் பேர், பெண்கள் ஆவர். இவர்கள் புகையிலை பயன்படுத்துவதால், அவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், குழந்தைப்பேறு பாதிக்கப்படுகிறது.
எனவே, அவர்கள் புகையிலைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை தடுப்பதற்கும், அவர்களது உடல்நிலையை பாதுகாப்பதற்கும், பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரியை கணிசமாக உயர்த்துமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Request to nirmala seetharaman for increase taxes in tobacco products