கனமழை எதிரொலி - தாம்பரம் மாநகராட்சியில் தயார் நிலையில் மீட்புப் படகுகள்.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டது.

இதனால், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அடையாறு ஆற்றின் அருகில் உள்ள சசி வரதன் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ. காலனி, கிஷ்கிந்தா சாலை, அமுதம் நகர், கன்னடபாளையம் அருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தனித்தீவு போல் காட்சி அளிக்கும்.

இந்த நிலையில், அங்குள்ள மக்களை மீட்பதற்காக கோவளத்திலிருந்து சுமார் 10 மீனவர்கள் ஆறு படகுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பகுதியில் உள்ள வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த தாம்பரம் ரெயில்வே கிரவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rescue boats ready for rain in thambaram


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->