தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் அதிரடியாக கைது!...முடக்கப்படுமா இணையவழி திரைப்படங்கள்? - Seithipunal
Seithipunal


தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து உடனே அவர்களுடைய இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

நஇதற்கிடையே, டிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 170-வது படமான 'வேட்டையன்' திரைப்படத்தை  ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினியுடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத் பாசில் மற்றும் நடிகைகள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை,மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில்,  இந்த திரைப்படம் உலகமெங்கும் நேற்று வெளியாகியது.  

இந்த நிலையில் படம் வெளியான சில நேரங்களில் இந்த படம் வேட்டையன் படம் இணையத்தில் வெளியானது. அஜயண்டே ரண்டம் மோஷனம் என்ற மலையாள படத்தின் சட்டத்திற்கு புறம்பான காப்பியையும் டெலிகிராமில் வெளியிட்டதாக  தமிழ் ராக்கர்ஸ் நிறுவன நிர்வாகிகள் இருவரை கொச்சி சைபர் கிரைம் போலீசார் பெங்களுருவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார், குமரேசன் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil rockers admins arrested in action will online movies be banned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->