தாயின் உயிரை காப்பாற்ற பெரிய குண்டானில் அமரவைத்து ஆற்றை கடந்த மகன்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாயை பெரிய குண்டானில் வைத்து மகன் ஆற்றைக் கடக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆந்திர மாநிலம் கல்லூரி மாவட்டம் பெடப்பயலு பகுதியை அடுத்த குஞ்சு வாடா பகுதியில் காட்டாறு உள்ளது. தற்போது ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். ஆற்றுக்கு அருகில் உள்ள மக்கள் தினந்தோறும் அந்த ஆற்றை கடந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு திடீரென உடல் நலவை குறை ஏற்பட்டதால் மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆற்றை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தனது தாயை மகன் பெரிய அண்டாவில் வைத்து நீச்சல் அடித்தபடி ஆற்றை கடந்த அக்கரைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து மூதாட்டி தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தாயை காப்பாற்றுவதற்காக மகன் தன்னுயிரை பொறுப்படுத்தாமல் தாயை பெரிய பாத்திரத்தில் வைத்து நீச்சல் அடித்தபடி தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

river is flooded the mother is placed in a large kundan and the son crosses the river


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->