அரசு அலுவலகத்தில் சிக்கிய ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்க கட்டிகள்.! 7 பேரிடம் விசாரணை...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அரசு அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அரசு அலுவலகத்தின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பையியை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொர்ந்து, 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்ககட்டிகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 7 பேரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 2 crore 31 lakhs cash and 1 kg gold bars caught in government office in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->