ரூ.5 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை பைக்கில் எடுத்துச்சென்ற நபரிடம் போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

ஆந்திர மாநிலம் கடப்பா நகர போலீசாருக்கு கள்ளச்சந்தையில் தங்கம் கடத்தப்படுகிறது என்று தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் நேற்று 2வது காந்தி சிலை அருகே வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அப்பொழுது பைக்கில் ஒரு பையுடன் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு நபரை  தடுத்து நிறுத்தினர்.

போலீசார் விசாரணையில் அந்த நபர் கடப்பாவில் உள்ள பி.கே.எம். தெருவை சேர்ந்த தேஷ்முக் பாரதிராஜாராவ் (41) என்பது தெரிய வந்ததுள்ளது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை.

இந்நிலையில் அவர் கூறியது, தான் தங்க வியாபாரி என்றும், இதை கடைக்கு எடுத்துச்செல்வதாகவும் பில் போட்டால் அதற்கு ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்பதற்காக பில் போடாமல் எடுத்துச்செல்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்க கட்டிகள் ரூ.5 கோடி மதிப்புள்ள 1 கிலோ 560 கிராம் எடையுள்ளத என்பது தெரியவந்தது. பிறகு பறிமுதல் செய்த தங்க கட்டிகளையும் தேஷ்முக் பாரதிராஜாராவையும் போலீசார் திருப்பதி வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

வருமான வரித்துறையினர் அவரிடம், இந்த தங்க கட்டிகள் எப்படி கிடைத்தது. இதை கொடுத்தவர்கள் யார், எங்கு கொண்டு செல்லப்படுகிறது, வியாபாரி என்றால் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்றதற்கான உண்மையாக காரணம் என்ன? விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs. 5 crore gold bars confiscated Police investigation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->