முன்பதிவு செய்து பிரசாதங்களை பெரும் முறை - சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மகர மற்றும் மண்டல சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் மையத்தை தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"இந்த தகவல் மையம் 24 மணி நேரமும் செயல்படும். இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக அனைத்து தகவல்களும், சேவைகளும் கிடைக்கும். சபரிமலையில் பிரசாதங்களான அப்பம், அரவணை ஆகிய பிரசாதங்களை பெற இங்கு முன்பதிவு செய்யலாம். 

அப்படி முன்பதிவு செய்யப்பட்ட ரசீதை சபரிமலை மாளிகைபுரம் பகுதியில் உள்ள வங்கி கிளையில் சமர்ப்பித்தால், அங்கிருந்து பிரசாதங்களை பெற்று கொள்ளலாம். சபரிமலை பக்தர்கள் அன்னதானம் மற்றும் இதர நன்கொடைகளை கியூஆர் கோடு வழியாகவும், டிஜிட்டல் கார்டு வழியாகவும் வழங்கலாம். 

கொச்சி விமான நிலையத்தில் டிஜிட்டல் சென்டர் வழியாக இதற்கான பண பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் வழிபாடுகள் நடத்த உள்ள இ-காணிக்கை வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimalai devotees book and receive offers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->