உலகின் சிறந்த மனிதராக திரும்பி வருவேன் - சானியா மிர்ஸா உருக்கம்! - Seithipunal
Seithipunal



இந்திய டென்னிஸ் உலகில் மிக பிரபலமானவர் சானியா மிர்சா. டென்னிஸ் போட்டிகளில் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவர், கலப்பு இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தவர். 

புகழின் உச்சத்தில் இருந்த போதே சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாகிஸ்தானில் குடியேறிய சானியா மிர்சா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். 

தற்போது தன் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் சானியா மிர்சா, தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் அவர், "இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தை நான் மேற்கொள்ள உள்ளேன். 

இந்த புனிதப் பயணத்தின் மூலம் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். நான் யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ் என்னை ஆசீர்வதிக்கப்பட்ட பாதையில் வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.

இந்த முக்கிய தருணத்தில் அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பயணத்தில் இருந்து நான் உலகின் மிக சிறந்த மனிதராக திரும்பி வருவேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் சானியா மிர்சா. மேலும் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sania Mirza Posted in Her Social Media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->