சாவர்க்கர் மீது அவதூறாக பேசியதாக வழக்கு: 23-ம் தேதி ராகுல் காந்திக்கு சம்மன்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை தற்போது முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சத்யாகி சாவர்க்கர், 2023-ல் ராகுல் காந்தி லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாவர்க்கரை பற்றி அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 

சத்யாகியின் மனுவில், ராகுல் காந்தி சாவர்க்கர் எழுதியதாக கூறிய ஒரு புத்தகத்தில், அவர் மற்றும் அவரது நண்பர்கள் ஒருமுறை ஒரு முஸ்லிம் நபரை தாக்கியதாகவும், அதை மகிழ்ச்சியாக அனுபவித்ததாகவும் கூறியதாக குற்றம் கூறப்பட்டு வந்தது.

இதற்கு பதிலளித்த சத்யாகி சாவர்க்கர், சாவர்க்கர் எந்த புத்தகத்திலும் இப்படிப்பட்ட விஷயங்களை எழுதவில்லை என்றும், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும் வலியுறுத்தினார். அவர் மேலும், இந்த அறிக்கைகள் சாவர்க்கரின் மரியாதைக்கு ஹானி விளைவிக்கும் வகையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த மனுவின் அடிப்படையில், போலீசாருக்கு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, புனே நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி, அவரை வரவிருக்கும் 23ஆம் தேதியன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savarkar defamation case Summons Rahul Gandhi on 23rd


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->