லாட்டரி அதிபர் மார்டினின் பண மோசடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை.!! - Seithipunal
Seithipunal


கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாட்டரி மார்ட்டின் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லாட்டரி மாட்டின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லாட்டரி அதிபர் மாற்றினுக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

மேலும் மார்ட்டின் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தனது நிறுவனம் மூலம் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்போது அவர் மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc interm stay on lottery Martin ed case investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->