சிவசேனா உட்கட்சி விவகாரம்... ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தனர்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியை மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான தீர்ப்பு வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு வழங்கியது.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் வாதித்தனர்.

அப்பொழுது ஆஜரான உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கறிஞர் சட்டப்பேரவையில் உள்ள பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு மீது இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC issues notice to Eknath Shinde to respond Uddhav Thackeray petition


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->