எஸ்சி பிரிவில் கூடுதல் சாதி இணைப்பு! மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


பட்டியலின வகுப்பில் கூடுதலாக சில சாதிகளை இணைப்பது உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு பீகார் மாநில அரசு, அம்மாநில பட்டியலின வகுப்பில் கூடுதலாக ஒரு சாதியை இணைத்து அரசாணை பிறப்பித்து இருந்தது.

இந்த அரசாணையின் படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த தாந்தி-தந்த்வா என்ற சாதி, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் எஸ்.சி.பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இந்த அரசாணையை எதிர்த்து ஒரு சமூகத்தினர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பீகார் மாநில அரசின் அரசாணையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, பிந்தைய அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி எஸ்.சி. பிரிவு சாதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் கூடுதலாக சில சாதிகளைச் இணைப்பது உள்பட எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம், எந்த மாநில அரசுக்கும் இல்லை" என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாட்னா உயா்நீதிமன்றம் பிகார் மாநில அரசாணையை உறுதி செய்து தீா்ப்பளித்துள்ளது பெரும் தவறும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் சுட்டிக்காட்டி, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC Order for Bihar SC Order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->