தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும்.!! SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ‌!! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி ஏன் தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி உத்தரவிட்டால் தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை பாரத ஸ்டேட் வங்கி கடைப்பிடிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் தேர்தல் பத்திரங்கள் சார்ந்த முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அனைத்து விவரங்களை வெளியிட நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களிலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக மறைக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும். குறிப்பாக சீரியல் எண், ஆல்பா நியூமரிக் எண் என தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC order to SBI release Electoral Bond full details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->