#BREAKING || இனி "கைது செய்ய முடியாது".. ED-க்கு கடிவாளம் போட்ட உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. 

அந்த தீர்ப்பில் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19 இன் படி அமலாக்கத்துறை மற்றும் அதன் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே குற்றச்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc ordered ED cannot arrested accused under pmla sec 19


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->