மணல் குவாரி வழக்கு || ஆட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டாமா? தமிழக அரசை ரவுண்டு கட்டிய நீதிபதிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்சியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் அனுப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "இந்த வழக்கில் எப்படி ரீட் மனு தாக்கல் செய்ய முடியும்? அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அழகின் விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, அவர்களிடம் விசாரணை நடத்த மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என வாதம் முன்வைத்தார். ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4காம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sc questioned TNGovt on sand quarry Edraid case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->