பள்ளி மாணவியின் உயிரை பிரித்த கற்றாழை சாறு - நடந்தது என்ன?
school girl died in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பேடராயனபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட மைசூரு சாலையில் வசிக்கும் தம்பதியின் மகள் நிதி கிருஷ்ணா. இந்த சிறுமி பள்ளிக்கூடம் ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் கற்றாழை சாறு குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில், சிறுமி நிதி கிருஷ்ணா கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் பாட்டிலில் இருந்த கற்றாழை சாறை எடுத்து குடித்துள்ளார். அதன்பிறகு, சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பெற்றோர் சிறுமியை அருகே உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிறுமி நிதி கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி குடித்து வரும் கற்றாழை சாறு காலியானதால், அந்த பாட்டிலில் செடிகளுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை பெற்றோர் நிரப்பி வைத்திருந்தும், அதனை சிறுமி கற்றாழை சாறு என்று நினைத்து குடித்து பலியானதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school girl died in karnataga