உ.பி : பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி நடத்த அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 5 1/2 வருடமாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

இதில் முதல்கட்டமாக, பள்ளி மாணவிகளுக்கு ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். 

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், மாணவிகள் அனைவரும் மனதளவிலும், உடலளவிலும் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதே ஆகும். இந்நிலையில், இந்த பயிற்சியானது இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்படும். 

பள்ளிகளில் இந்த பயிற்சி நடைபெறும்போது, பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். அதேபோல், ஆசிரியர் ஒருவரும், மாணவிகளுக்கான பயிற்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார். 

இந்த பயிற்சி தொடங்கிய முதல் வாரத்தில் பயிற்சிக்கான நடவடிக்கைகளுடன் சேர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student self confident trainning in uttar pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->