பிரதமர் மோடி கையில் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19 நாள் ரக்ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள். 

பதிலுக்கு சகோதரர்களும், தனது சகோதரி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உறுதியளித்து கையில் கயிறு கட்டி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இந்த ராக்கி கயிறை உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கட்டி மகிழ்வார்கள்.

இந்த நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். பள்ளி மாணவிகள் ராக்கி கட்டும் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். "தனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students raksha bandan celebrate with pm modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->