தமிழக அரசும், ஆளுநரும் புது காதலன், புது காதலி - செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

"கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.

தமிழக அரசும், ஆளுநரும் புது காதலன், புது காதலி போல உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது. ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். 
ஆனால், ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார்" என்று காட்டமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju press meet about dmk govt and governor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->