உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையை நிராகரித்த மூத்த நீதிபதி! - Seithipunal
Seithipunal


கடிதத்தின் மூலம் நீதிபதிகளின் நியமன முடிவை கேட்டதால் நிராகரிப்பு! 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியூ லலித் தலைமையிலான கொலிஜியம் குழுவில் உறுப்பினர் நீதிபதிகளாக டி.ஒய்.சந்திர சூட், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இருந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் குறித்து கொலிஜியம் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த அமைப்பில் இடம்பெற்று இருந்த மூத்த நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அன்றைய தினம் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை இரவு 9 மணி வரை விசாரணை நடத்தினார். இதனால் அன்றைய கூட்டம் நடைபெறாமல் போனது. இதன் காரணமாக நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியலை கடிதம் மூலம் நான்கு முகநூதி பதவிகளுக்கும் தலைமை நீதிபதி யு.யு லலித் கடிதம் மூலம் அனுப்பினார். 

இத்தகைய நடைமுறை இந்திய நீதித்துறை வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை என்பதால் நீதித்துறை வட்டாரமே அதிர்ச்சிக்குள்ளானது. மேலும் புதிய நீதிபதிகள் பரிந்துரை கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடிதம் மூலம் அனுப்பப்பட்ட நீதிபதிகள் பரிந்துரை பட்டியலை மூத்த நீதிபதிகள் டி.ஒய் சந்திர சூட் மற்றும் அப்துல் நசீர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய நீதிபதிகள் நியமன பட்டியல் கைவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திர சூட் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

senior judge rejected the recommendation of the Supreme Court Chief Justice


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->