'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' (Jurassic World Rebirth) படத்தின் டிரெய்லர் வெளியாகி, இணையத்தில் வைரல்..! - Seithipunal
Seithipunal


'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படம் வருகிற ஜூலை மாதம் 02-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். 

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமான டேவிட் கோப், 1993-ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "ஜுராசிக் பார்க்" மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான "ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்" ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார். 

இந்நிலையில், இவர் 'ஜுராசிக் வேர்ல்ட்' 4-வது பாகத்திற்கான கதை எழுதியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கரேத் எட்வர்ட்ஸ் இயக்கிய 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The trailer of Jurassic World Rebirth is out and is going viral on the internet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->