தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகளுக்கு 7 நாட்கள் காவல்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
seven days police custody to telangana ex cm daughter kavitha
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறி, ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர்.
அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் கவிதாவை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். அப்போது, பிஆா்எஸ் செயல் தலைவரும் கவிதாவின் சகோதரருமான கே.டி.ராமராவ், முன்னாள் அமைச்சா் ஹரீஷ் ராவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், கவிதாவின் வீட்டின் முன்பு திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும், அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ராமராவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடா்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் கவிதாவை டெல்லி அழைத்துச் சென்றதையடுத்து, நேற்று அங்குள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு கவிதாவை மார்ச் 23ஆம் தேதி வரை அதாவது 7 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத் துறை தரப்பில் 10 நாள்கள் காவல் கோரிய நிலையில் 7 நாள்கள் மட்டும் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
English Summary
seven days police custody to telangana ex cm daughter kavitha