திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்ததால் வாக்குவாதம் - பெண் வீட்டார் மீது காரை ஏற்றிய மாப்பிள்ளை வீட்டார்.!
seven peoples injured for groom family member attack in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது தொடர்பான சண்டையில் மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் பெண் வீட்டை சேர்ந்த 7 பேர் மீது வண்டியை ஏற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசாவில் மணமகள் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதால் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர். அப்போது திருமண மண்டபத்திற்கு வெளியே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் தனது காரை பார்க்கிங் செய்ய முயன்றுள்ளனர். இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டு ஆட்கள் 7 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் ஆத்திரத்தில் தனது காரை இயக்கி முன்னாள் நின்ற அந்த 7 பேர் மீதும் ஏற்றியுள்ளார். இதனால் அந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் பெண் வீட்டார் மீது காரை ஏற்றிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
seven peoples injured for groom family member attack in rajasthan