மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மக்கள்! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள விரார் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அப்பொழுது மாணவிகளிடம் அவர் தவறான முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. 

8-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியர் தொல்லையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், டியூசன் செல்வதை நிறுத்தியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் திடீரென டியூசன் செல்லாததன் காரணம் என்ன என கேட்கும் போதுதான் டியூசன் ஆசிரியரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டியூசன் ஆசிரியர் நடந்துகொண்ட விதத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு கோபமடைந்த மாணவியின் பெற்றோர், சக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சேர்ந்து டியூசன் ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரின் ஆடைகளை அவிழ்த்து ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். 

இறுதியில் அவரை போலீசில் ஒப்படைத்தனர். டியூசன் ஆசிரியரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசன் ஆசிரியரால் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார், தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual harassment of students People attacked the teacher barrage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->