தீர்ப்பு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது - தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உத்தவ் தாக்கரே போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


“சிவசேனா” என்ற கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான “வில் அம்பு”வையும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தக்க வைத்துக் கொள்ள, தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர ஆளுங்கட்சியாக இருந்த சிவேசானாவின் குடும்ப, வாரிசு அரசியல் காரணமாக, அக்கட்சி இரண்டாக பிரிந்தது. இதில், 41 எம்எல்ஏ.,க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்றிணைந்தனர்.

பின்னர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக ஆதரவு கரம் நீட்டியதுடன், கூட்டணி வைத்து ஆட்சியையும் அமைத்தது. இதற்கிடையே, சிவேசானா கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி 'தாங்கள் தான் உண்மையான சிவசேனா' என்று அங்கீகரிக்கவும், அக்கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை ஒதுக்கக் கோரியும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், இன்று தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பை அங்கீகரித்து கட்சியையும், சின்னத்தையும் அவரிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என்று, உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்றால், ஒரு தொழிலதிபர் அவர்களை வாங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியுமே? 

உச்சநீதிமன்றம் எங்கள் கோரிக்கையை ஏற்று, 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடும் என நம்பிக்கை உள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்" என்று, உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ShivSenaCrisis EknathShinde ECI UddhavThackeray


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->