அதிர்ச்சி சம்பவம்!...தீப்பிடித்து எரிந்து கொண்டே கீழே விழுந்த ஹெலிகாப்டர்!....3 பேர் பலி? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்த விபத்தில், இரண்டு விமானிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஆக்ஸ்போர்டு ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அகஸ்டா 109 ரக எண் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் மற்றும் விமான பராமரிப்பு என்ஜினீயர் என 3 பேர் பயணித்தாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த ஹெலிகாப்டரில் வேறு பயணிகள் யாரும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.


தொடர்ந்து  ஹெலிகாப்டரில் 3 பேர் பயணம் செய்த போது திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தபடியே கீழே விழுந்தது. இந்த விபத்தில்  3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக  முதல்கட்ட தகவல்கள் மூலம் தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி தெரிவித்துள்ளதாவது, விமானத்தில் பயணம் செய்த  விமானிகளான கேப்டன் பிள்ளை மற்றும் கேப்டன் பரம்ஜித் ஆகிய இருவரும் உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுவதாகவும், என்ஜினீயரின் நிலை பற்றி தெரிய வரவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து தகவல்களை உறுதி செய்யும் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking incident helicopter fell on fire 3 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->