இந்திய மாணவர்கள் தலையில் இடி போல் வெளியான அதிர்ச்சி செய்தி! ‘ஸ்டூடன்ட் விரைவு விசா’ முறையை நிறுத்தியது கனடா! - Seithipunal
Seithipunal


கனடா சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை நிறுத்தியது, பல இந்திய மாணவர்களின் கனவுகளை பாதித்துள்ளது. 2018-ல் தொடங்கிய இந்த விரைவு விசா திட்டம், இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 14 நாடுகளின் மாணவர்களுக்கு அனுகூலமாக இருந்தது. இதில், மாணவர்கள் விரைவாக விசா பெற்று கனடாவில் கல்வி கற்க சென்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கனடா விசா வழங்கியது, இதில் 2 மாதங்களில் இந்திய மாணவர்கள் விசா பெற்றனர்.

குடியிருப்பிடம், வேலைவாய்ப்பு, உட்பட பல்வேறு வசதிகளில் நிலவிய சிக்கல்கள் காரணமாக, கனடா இந்த விரைவு விசா நடைமுறையை நிறுத்த முடிவு செய்தது. இது மட்டுமல்லாது, 2024-ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கையில் 4,37,000 பேருக்கு மட்டுமே உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மொழி தேர்வு மற்றும் வேலை அனுமதிகளுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களால், கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தைப் பதிய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். மொழித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல், அதிக முதலீட்டு நிதி அளிப்பு போன்ற பல கட்டுபாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களிடையே ஏமாற்றமும், புதிய சவால்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கனடாவின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அங்கு படிக்க செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking news of Indian students Canada has stopped the Student Express Visa system


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->