கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணம் என்றே கூறலாம். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்திற்கான விண்ணப்ப பதிவை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 1.28 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் விரைவில் வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah launched a scheme of Rs 2000 per month for heads of households in Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->