சிக்கிம் வெள்ளத்தில் 18 பேர் பலி! 154 பேரின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
Sikkim govt announced 18 people died 154 people missing in floods
சிக்கிம் மாநிலம் லான்சன் பள்ளத்தாக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடக்கு சிக்கும் பகுதியில் அமைந்துள்ள சுங்தாங் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததை அடுத்து அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சிங்டாங் அருகே பர்டாங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் வெளியானது
மேலும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிக்கிம் மாநிலத்திற்கு விரைந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் சிக்கிம் மாநில அரசு வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சிக்கிம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சுமார் 2000 மேற்பட்டோர் மீட்டப்பட்ட நிலையில் அவர்களின் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்போது வரை 154 பேர் மாயமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 17 மருத்துவ முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கின் போது 6 பாலங்களும், 2 அரசு கட்டிடங்களும், 16 மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளதாகவும் சிக்கிம் மாநில அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
English Summary
Sikkim govt announced 18 people died 154 people missing in floods