கேஸ் சிலிண்டர் வெடித்து 6 அய்யப்ப பக்தர்கள் பலி - ஒய்வு எடுத்தபோது நேர்ந்த கொடூரம்.!
six ayyappan devotees died for accident in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளி மாவட்டம் சாய் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டுச் சென்ற பக்தர்கள், இரவு கோவில் அறையில் தங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்கியிருந்த வீட்டில் சமைத்த பிறகு கேஸ் சிலிண்டரை சரியாக அணைக்காததால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்தது.
English Summary
six ayyappan devotees died for accident in karnataga