தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் 6 பேர் பணிநீக்கம்.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளை கண்காணித்து அவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி காஷ்மீர் மாநிலம் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அதில் பயங்கரவாதிகளுக்கு துப்பு கொடுப்பது, அவர்களுக்கு ஆதரவாக ஆட்களை ஒருங்கிணைப்பது, நிதி திரட்டுவது மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு வைத்திருந்த அரசு அதிகாரிகள் மீது சந்தேகம் வலுத்ததையடுத்து அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். 

அந்த விசாரணையில் போலீஸ் முதல் பள்ளி ஆசிரியர் உள்பட 6 அரசு அலுவலர்களுக்கு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்கள் 6 பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த நபர்களுக்கு எதிராக சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகள் கணிசமான ஆதாரங்களை சேகரித்ததுடன், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் அவர்கள் தொடர்பு வைத்திருப்பதை உறுதி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six government employees dismiss in kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->