அதிகாலையில் இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தெற்கு மும்பையின் பெண்டி பஜார் பகுதியில் இன்று அதிகாலை 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்டிடம் காலியான பாழடைந்த கட்டிடம் என்பதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:-

"பெண்டி பஜார் பகுதியில் உள்ள நிஷான்பாடா சாலையில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. முதற்கட்ட தகவலின்படி, கட்டிடம் பாழடைந்த நிலையில் காலியாக இருந்ததாக கூறப்படுகிறது" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six storey building collapse in mumbai maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->