வங்கதேச எல்லையில் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்! விசாரணையில் அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் சுமார் 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேற்குவங்கம் நாடியா மாவட்டத்தை சேர்ந்த விஜய்பூர் கிராமத்தில் கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த வீடுகளில் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 106 தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் எடை 14.29 கிலோ. இதன் மதிப்பு ரூ. 8.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வங்கதேசம் வழியாக இந்த தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர்கள், வங்கதேசத்தை சேர்ந்தவர்களிடம் கடத்தல் தங்கத்தை ஒப்படைக்க இருப்பதாக விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smuggled gold seized Bangladesh border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->