4 பேரின் உயிரை பறித்த சோப்பு ஆலை: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், மீரட் மாவட்டத்தில் உள்ள சோப்பு தொழிற்சாலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

மீரட், லோஹியா நகரத்தில் உள்ள 2 அடுக்கு மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் சோப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் கட்டிட இனிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இடுபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, ''சோப்பு தொழிற்சாலை வாடகை வீட்டில் செயல்பட்டு வந்தது. இந்த பகுதியில் பட்டாசுகள் எதுவும் உற்பத்தி செய்யப்படவில்லை. 

சோப்பு தயாரிக்க பயன்படுத்திய ரசாயனங்கள், இயந்திரங்கள் போன்றவை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை 2 குழந்தைகள் கடந்து சென்றதால் அவர்கள் காயமடைந்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soap factory accident 4 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->