சூரியனை ஆராயும் ப்ரோபா-3: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செல்லும் இரட்டை செயற்கைக்கோள்
Solar probe Proba 3 Twin satellite launched today by ISRO PSLV C 59 rocket
சூரியனை ஆராய்ச்சிக்கு உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக இன்று (டிசம்பர் 4) மாலை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கிய திட்டம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் மாலை 4.08 மணிக்கு நடைபெற உள்ளது.
ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஎஸ்ஏ) வடிவமைத்தவை. இவைகளை விண்ணில் ஏவுவதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம், இஎஸ்ஏவுடன் இணைந்து மேற்கொண்டது. இதற்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது, மேலும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த இரட்டை செயற்கைக்கோள்கள், புவியிலிருந்து 60,500 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கு, 150 மீட்டர் இடைவெளியில் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்ட இவை, சூரியனின் புறவெளிப் பகுதியை ஆராய்ந்து தரவுகளை பூமிக்கு அனுப்பும்.
இந்த மிஷன் வெற்றிகரமாக நிறைவேறினால், சூரியனை ஆராய்வதற்கான மிக முக்கிய தரவுகளை இஸ்ரோவும், உலக விஞ்ஞானிகளும் பெறுவார்கள், இது மனிதகுலத்தின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மாபெரும் முன்னேற்றமாகும்.
English Summary
Solar probe Proba 3 Twin satellite launched today by ISRO PSLV C 59 rocket