நீரவ்மோடியின் கடையை ரூ.48 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடியின் மும்பை நகரத்தில் உள்ள "ரிதம் ஹவுஸ்" மியூசிக் ஸ்டோரை ரூ.47.80 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

நீரவ் மோடி, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு வங்கிகளிடம் 28,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற பின்னர், அவரது சொத்துகள் அமலாக்கத்துறையால் (ED) கைப்பற்றப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

"ரிதம் ஹவுஸ்" என்பது 1940-ல் தொடங்கப்பட்ட ஒரு மிகப் பழமையான இசை விற்பனை கடை ஆகும். மும்பையின் காலகோடா பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடை 3,600 சதுர அடி பரப்பளவைக் கொண்டது.

இசை தொழில்நுட்பம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வந்ததால், கடந்த 8 ஆண்டுகளாக இந்தக் கடை மூடப்பட்டது. நீரவ் மோடிக்கு சொந்தமான இந்தச் சொத்தை 2020-ல் அமலாக்கத்துறை கைப்பற்றியது, அதனை விற்பனை செய்வதற்காக National Company Law Tribunal (NCLT) அனுமதி அளித்தது.

சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜா, இந்தக் கடையை வாங்கி இருக்கின்றனர். சோனம், பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonam Kapoor bought Nirav Modi shop for Rs 48 crore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->