ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்!...பயங்கரவாதிகள் நடத்திய வாகன தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம்! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,  தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக கடந்த 16-ம் தேதி உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில், 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் காரணமாக குல்மார்க் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் கந்தர்பல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரிதம் சிங் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த பகுதிகளில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in jammu and kashmir 5 soldiers martyred in vehicle attack by terrorists


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->