4.69 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு சிறப்பு அனுமதி.!
Special permission has been granted for wheat exports
சுமார் 4.69 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் இந்தியாவிடமிருந்து கோதுமை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பருவமழை காலம் தொடங்கி இருக்கும் சூழலில் துறைமுகங்களில் இருக்கும் கோதுமை மழையால் சேதமடையும் என்பதால் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து மலேசியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் 4.69 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
English Summary
Special permission has been granted for wheat exports