இலங்கையில் பொருளாதார நெருக்கடி : ராஜினாமா செய்யும் ஏர்லைன்ஸ் விமானிகள்.!
sri langan airlines poilets resigning for economic problam
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலர் வேலையிழந்தது மட்டுமல்லாமல், வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், இலங்கை அரசுக்கு செந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றும் விமானிகளும் ஊதிய பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் விமானிகள் பணியில் இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அதாவது, கொரோனாவுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் முந்நூற்று பதினெட்டு விமானிகள் பணியில் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை இருநூற்று முப்பத்தைந்தாக குறைந்துள்ளது. இது விமான நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமானிகள் ராஜினாமா குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு நுடாலும் கவலை தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின்பு இலங்கையின் சுற்றுலாத்துறை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், விமானிகளின் இந்த வெளியேறுதல் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து உள்ளது.
English Summary
sri langan airlines poilets resigning for economic problam